திருமணமான ஒரு மாதத்தில் புதுமணப்பெண் செய்த செயல்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
917Shares

திருமணமான ஒரு மாதத்தில் கணவனின் இல்லத்தில் இருந்து நகைகளை திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது50). இவர் கடந்த மே 2ஆம் தேதி ரமணம்மா (வயது 36) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ரமணம்மா தான் அநாதை என்றும் தனக்கு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் வில்லிவாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெங்கடராமன் பணிக்கு சென்று வீடு திரும்பிய போது ரமணம்மாவை காணவில்லை.

அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த வெங்கடராமன் மனைவியை தேட ஆரம்பித்துள்ளார்.

மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்தவர் வீட்டில் வந்த பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 80 ஆயிரம் பணம் மட்டும் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தப்பெண்ணை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்