பெண்ணின் மார்பில் எட்டி உதைத்த நபர்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in இந்தியா
266Shares

தெலுங்கானாவில் நிலப்பிரச்சனை காரணமாக பெண்ணின் மார்பில் கிராமப்புற தலைவர் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Khammam மாவட்டத்தின் Gowraram கிரமாத்தைச் சேர்ந்தவர் Rajavva.

இவர் கிராமப்புற தலைவராக இருக்கும் கோபியின் வீட்டின் முன்பு நின்று வெகுநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த கோபியை அந்த பெண் காலணியால் அடித்துள்ளார், இதனால் கோபி ஆத்திரத்தில் அந்த பெண்ணின் மார்பில் எட்டி உதைத்துள்ளார்.

இதில் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார், இதுதொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினரின் கோபியின் நிலத்தை சுமார் ரூ.33 லட்சத்திற்கு வாங்கியுள்ளனர்.

ஆனால் நிலத்தை கொடுக்காமல் மேலும் 23 லட்சம் ரூபாய் வேண்டும் என்று அடம்பிடித்ததன் காரணமாகவே வந்ததாகவும், ஆனால் அவர் என்னை எட்டி உதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்