தாயை துப்பாக்கியால் சுட்ட குழந்தை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in இந்தியா
82Shares

இந்தியாவில் பொம்மை துப்பாக்கி என நினைத்து குழந்தை சுட்டத்தில், அதன் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில், ஆரம்பாக் அருகே உள்ள கிராமம் கானக்கோல் கிராமத்தைச் சேர்ந்த பெண் காகோலி ஜனா. இவர், தனது வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு தோட்டத்தில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, கீழே துப்பாக்கி ஒன்றை கண்டுள்ளார்.

அதனை பொம்மை துப்பாக்கி என்று நினைத்த அவர், அதனை தனது பெண் குழந்தையிடம் விளையாட கொடுத்துள்ளார். குழந்தையும் பொம்மை துப்பாக்கி என்று நினைத்து விளையாட்டாக தனது தாயை சுட்டுப்பார்த்தது.

இதில் குண்டடிபட்ட காகோலி ஜனா, உடனடியாக ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், காகோலியின் நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும், உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்