இப்போதைக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை: நடிகர் ரஜினிகாந்த்

Report Print Deepthi Deepthi in இந்தியா
414Shares

ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம், காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது.

மேலும் தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே சென்னை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்