9 மாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பேருந்து ஓட்டுநர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
199Shares

ஈரோடு மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்துள்ளார்.

பேருந்து நிறுத்தத்தில் பத்மாவதி என்ற நிறைமாத கர்ப்பிணி இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார்.

இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்மாவதியை ஓட்டுனர் சின்னசாமி எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஓட்டுநருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக ஏனைய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர்.

அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்