வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவ வேண்டும்: நடிகர் சூர்யா பேச்சு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கல்வி, ஒழுக்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தவறாக போகாது என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

நடிகர் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை அகரம் சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கப்பட்டது.

இதில், தனது தந்தையுடன் நடிகர் சூர்யா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

திண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சூர்யா, நடிகர் என்பதை விட அகரம் மூலம் மாணவர்கள் கல்விக்கு உதவுவதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அதில்தான் நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா, அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான வி‌ஷயங்கள் எல்லாம் செய்தாகி விட்டது.

இனிமேல் செய்கிற ஒவ்வொரு வி‌ஷயமும் அகரம் அறக்கட்டளைக்கு மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை.

கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்