ஆட்டை விழுங்கிவிட்டு கிடந்த மலைப்பாம்பு: தோளில் தூக்கிபோட்ட அதிகாரியின் துணிச்சல் செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
328Shares

கொல்கத்தாவில் Jalpaiguri என்ற கிராமத்தில் சுமார் 18 அடி மலைப்பாம்பு ஒன்று ஆட்டினை கொன்று விழுங்கியுள்ளது.

மயக்கத்தில் கிடந்த மலைப்பாம்பினை வனத்துறை அதிகாரிகள் எடுத்துசெல்வதற்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகளில் ஒருவர், பாம்பினை மிகவும் தைரியமாக தனது தோளில் தூக்கிபோட்டுள்ளார்.

இதனைப்பார்த்த அங்கிருந்த மக்கள், செல்பி எடுத்துக்கொள்வதற்காக அருகில் வந்து கூச்சலிட்டுள்ளனர். சிறிது நேரம் அமைதியாக இருந்த பாம்பு, திடீரென சீற ஆரம்பித்துள்ளது.

இதனால், வனத்துறை அதிகாரி கூட்டத்தை விட்டு விலகி சென்றார். பின்னர் பத்திரமாக பாம்பு காட்டுப்பதிகுக்குள் விடப்பட்டது. அதிகாரியின் இந்த தைரியமான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்