பிக்பாஸ்: முதல் நாளே சிறையில் இருக்கும் சசிகலாவை சீண்டிய கமல்

Report Print Arbin Arbin in இந்தியா
287Shares

பிக்பாஸ் இரண்டாவது சீசனில், அந்த வீட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறையை பார்வையிட்ட கமல் வசதி எதுவும் இல்லாத போலிச் சிறையா என கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசன் நடந்து கொண்டிருந்தபோதுதான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பரபரப்பாக பேசப்பட்ட அந்த சம்பவத்தை பிபாஸ் நிகழ்ச்சியிலும் பதிவு செய்தார் கமல். வெளியில ஃபைவ் ஸ்டார் சிறையெல்லாம் இருக்கு என சசிகலாவை கிண்டலாக குறிப்பிட்டிருந்தார் கமல்.

தற்போது இரண்டாவது சீசனில், பிக்பாஸ் வீட்டுக்குள் விதிமுறைகளை மீறுகிறவர்களையும் தப்பு செய்கிறவர்களையும் தண்டிக்க சிறை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த சிறைக்குள் பார்வையிட சென்ற கமல், என்ன ஃபேன் கூட இல்லயே, அப்ப ஒரிஜினல் சிறை இல்லையா எனக் கேட்டுள்ளார்.

சென்ற ஆண்டு சிறையில் சசிகலா வசதி வாய்ப்புகளை அனுபவித்ததைக் கிண்டலடித்ததை போலவே இந்த முறையும் முதல் நாளிலேயே அரசியல் நெடியுடன் கமல் பேசத்துவங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்