ரம்ஜான் தினத்தன்று காஷ்மீரில் வன்முறை: கல் வீச்சில் வாலிபர் உயிரிழப்பு

Report Print Trinity in இந்தியா
27Shares
27Shares
ibctamil.com

ஜம்மு காஷ்மீர் மாவட்டம் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் அமைப்பினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வாலிபர் கொல்லப்பட்டார்.

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீர் பகுதியில் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ நகரிலும் இது போல ரம்ஜானிற்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த உடன் திடீரென பாகிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சில வாலிபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் திடீரென பாகிஸ்தான் கொடியையும் ஐஎஸ் கொடியையும் காட்டியதால் நிலைமை பதட்டமானது. அதனை தொடர்ந்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இந்த கல்லெறி சம்பவத்தால் ஆனந்த்நாக் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். 10 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்