ஆணாக மாறிய பெண் காதல் திருமணம்! தீக்குளித்து உயிரிழந்த பரிதாபம்- நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
413Shares
413Shares
ibctamil.com

புதுச்சேரியில் காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து போனதால் மனமுடைந்த கணவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

திருச்செந்தூரைச் சேர்ந்தவர் அக்ஷயதேவ்(வயது 28), புதுச்சேரியில் பணியாற்றி வருகிறார்.

பிறப்பில் பெண்ணாக இருந்த அக்ஷயதேவ், நாளடைவில் ஆணாக மாறினார், இவருக்கும் வடலூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர், தான் முழுமையான ஆணாக மாறியதும் குடும்ப வாழ்க்கையை தொடங்க முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் திகதி அறுவை சிகிச்சை செய்து கொண்டார், இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு யூன் 6ம் திகதி பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்தே ராஜேஸ்வரிக்கு மனமாற்றம் ஏற்பட்டது.

தினமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல வழி தேடியுள்ளார், நாட்கள் செல்ல செல்ல சண்டை அதிகமாகி பிரிந்தும் சென்றுள்ளார்.

அக்ஷய்தேவ், உறவினர்கள் சமாதானம் செய்து வைத்தும் ராஜேஸ்வரி மனம் மாறவில்லை, இதனால் மனமுடைந்த அக்ஷய்தேவ், கடந்த 8ம் திகதி ராஜேஸ்வரியிடம் கடைசியாக பேச முடிவு செய்தார்.

அங்கே, மீண்டும் சேர்ந்து வாழலாம் என கெஞ்சியுள்ளார், ஆனால் ராஜேஸ்வரியின் மனம் மாறவில்லை, இதனால் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அருகிலுள்ள சாக்கடையில் விழ, உடனடியாக பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

75 சதவிகித காயங்களுடன் அக்ஷய்தேவ்க்கு சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு பின்னர் மரணமடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்