பிரபல நடிகை வீட்டில் பயங்கர தீ விபத்து: பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டரில் தகவல்

Report Print Balamanuvelan in இந்தியா
66Shares
66Shares
ibctamil.com

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வீட்டில் இன்று மதியம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பையிலுள்ள Beaumonde Towers என்னும் அந்த 34 தளங்கள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடத்தில் தீபிகா படுகோனின் வீடும் அலுவலகமும் உள்ளன.

தீ விபத்து ஏற்பட்டபோது அவர் வீட்டில் இல்லை என்றும், அவரது வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் 90க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்தக் கட்டிடத்தில் தீயணைப்புப் பணியிலிருக்கும் தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் தீபிகா படுகோன் ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

கட்டிடத்தின் 33ஆவது தளத்தில் மதியம் சுமார் 2 மணியளவில் தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்