பட்டப்பகலில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெட்டிக்கொலை: சரணடைந்த கொலையாளிகள்

Report Print Trinity in இந்தியா
111Shares
111Shares
ibctamil.com

நேற்று மதுரையில் ரேஷன் கடை ஊழியரை கொன்றவர்கள் திண்டுக்கல் கோர்ட்டில் இன்று சரண் அடைந்தனர்.

மதுரை வாழைத்தோப்பில் ஸ்ரீ மீனாட்சி பண்டக சாலை எனும் ரேஷன் கடையில் பணிபுரிந்து வந்தவர் முனியசாமி. இவர் மதுரை காமராஜர் புரத்தை அடுத்த பகவத்சிங் புறத்தை சேர்ந்தவர்.

நேற்று காலை வழக்கம்போல பணியை தொடங்கிய முனியசாமி மக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ரேஷன் கடையில் வைத்து முனியசாமியை பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் பல இடங்களில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.

பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து முனியசாமியின் உடலை கைப்பற்றினர்.

கொல்லப்பட்டவருக்கு சுமதி என்கிற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கண்ணன், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நவீன் ஆகியோர் சரணடைந்துள்ளார்.

இந்த கொலைக்கான காரணங்கள் இன்னமும் வெளியாகவில்லை இருப்பினும் முனியசாமி டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்