சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த இருவர்: பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா
490Shares
490Shares
ibctamil.com

சென்னையில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அதை வீடியோ எடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பனையூரில் கூலித் தொழிலாளியின் 13 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான சாகுல், ரகமத்துல்லா ஆகிய இருவரும் 3 மாதத்துக்கு முன் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

அதை வீடியோ எடுத்துக் கொண்டு அவ்வப்போது அந்தச் சிறுமியை மிரட்டிப் பலாத்காரம் செய்துள்ளனர்.

நேற்றும் இதுபோல செய்த நிலையில் சிறுமி தனது தாயிடம் அழுது கொண்டே நடந்ததை கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக பொலிசாரிடம் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் சாகுல், ரகமத்துல்லா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த பொலிசார் அவர்களைக் கைது செய்தார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்