துப்பாக்கி சூடு: தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்துக்கு மாலையில் சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதையடுத்து, தலைமை செயலக வளாகத்தில் பாரதிராஜா, அமீர், திருமுருகன் காந்தி உள்பட 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுடைய மனுவை வாங்குவதற்கு கூட தலைமைச் செயலர் வரவில்லை என்று அமீர் காட்டமாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers