தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல நடிகரின் மைத்துனர் பலி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கையின் கணவர் இறந்துவிட்டதாக, பிரபல நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான சில்வா கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஏராளமான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம், கலவரமாக மாறியதால் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 11 பேர் தற்போது வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரபல நடிகரும், ஸ்டண்ட் கலைஞருமான சில்வா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார், மிக்க வேதனையோடு பகிர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்