தமிழக செய்தியை கேட்டு என் இதயம் துயரத்தால் நிரம்பியது: ஆளுநர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் அறிக்கையில், "இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டினால் 11 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு என் இதயம் முழுவதும் துயரம் நிரம்பியிருக்கிறது.

உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்