பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தது யார்? கமல் ஆவேசம்

Report Print Santhan in இந்தியா

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை கண்டிப்பதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்பது வணிகத்திற்காக பொதுமக்கள் மீது அநீதி என கண்டனம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருகிறது. இதில் பள்ளி படிக்கும் மாணவி ஒருவரும் அடங்குவார் என்ற செய்தி மன வேதனையை தருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடந்து பேசிய அவர் கண்டிப்பாக ஆலையை மூட வேண்டும் என்றும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான ஆணையை யார் வழங்கியது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்