தூத்துக்குடியில் நடந்த உயிர்சேதத்திற்கு தமிழக அரசே பொறுப்பு: ரஜினிகாந்த் கண்டனம்

Report Print Trinity in இந்தியா

இன்று தூத்துக்குடியில் நடந்த கலவரத்திற்கும் வன்முறைக்கும் அதன் பின்பான உயிர்சேதத்திற்கும் தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் நூறாவது நாளான இன்று போராட்டத்தின் போது போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஒரு பள்ளி மாணவியும் அடக்கம்.

தூத்துக்குடியில் நடந்த இந்த வன்முறை குறித்து தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழும்பியுள்ள நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசின் மெத்தனமே இந்த வன்முறைக்கு காரணம் என்றும் இது வருந்த வேண்டிய விடயம் மட்டுமல்ல கண்டிக்க வேண்டிய விடயமும் கூட என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நடந்த வன்முறைக்கும், உயிர்பலிக்கும் தமிழக அரசுதான் பொறுப்பு என்றும் அவர் அதில் கூறியிருந்தது தற்போது பரபரப்பாகியிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்