பொதுமக்களின் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்: 70 தடவைக்கு மேல் என நேரில் பார்த்தவர்கள் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பொலிசார் பொதுமக்களின் நெஞ்சை நோக்கி சுட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியதன் காரணமாக, ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பல்வேறு கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பேரணியாக சென்றனர்.

அப்போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியதால், போராட்டம் கலவரமாக மாறியது.

இதனால் கலவரத்தை கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்காக பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் தற்போது வரை 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிசார் முதலில் போராட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும், கூட்டம் கலையவில்லை என்றவுடன் பொலிசார் வானத்தை நோக்கி சுடாமல், எடுத்த எடுப்பிலேயே பொதுமக்களின் நெஞ்சை நோக்கி சுட ஆரம்பித்தாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் சுமார் 70 தடவைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தியதன் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகமாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

பொலிசார் வானத்தை நோக்கியோ அல்லது மைக்கில் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்றோ எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.

அதற்கு மேலாக கலெக்டர் நேற்றைய தினமே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் பொதுமக்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers