"முன்பு ஆலையினால் இறப்பு, தற்போதோ அரசு ஆணையினால் இறப்பு": கமல்ஹாசன் இரங்கல்

Report Print Trinity in இந்தியா

"முன்பு ஆலையினால் இறப்பு, தற்போதோ அரசு ஆணையினால் இறப்பு" என்று தூத்துகுடி கலவரம் குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் தொடங்கிய போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியது.

144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் அதனை மீறி ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முனைந்தனர். கண்ணீர் புகை குண்டு வீச்சிற்கும் அசராமல் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். அலுவலகத்திற்குள் போராட்ட காரர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் தடியடி போன்ற முயற்சிகளை காவல்துறையினர் ஈடுபட்ட போது அங்கு கலவரம் வெடித்தது. இதனை அடுத்து துப்பாக்கி சூடு நிகழ்த்திய காவல்துறையினரால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மக்கள் அமைதியாக போராடியபோதெல்லாம் அவர்களை அலட்சியப்படுத்தியது தமிழக அரசு .இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை இருப்பினும் எப்போதும் அவர்களே உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போதோ அரசு ஆணையினால். மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

10 உயிர் பலியானபின்னும் நெஞ்சை இறுக செய்யும் மக்களின் இந்த அமைதியை வைத்து தமிழக அரசு என்ன செய்ய போகிறது என்பது இப்போது உள்ள நிலைமையை பெரிய கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்