தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கலவரம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பாரதிராஜா எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போராட்டகாரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலவர துப்பாக்கிச் சூட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். ரயில்வே காலனிபகுதியைச் சேர்ந்த வெனிஸ்டா என்ற பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார்.

இவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இதில் மேலும் 5 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடுமையான சம்பவம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக எடப்பாடி அரசு மாறிவிட்டது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஜனநாயக விரோத அரசாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அடக்குமுறையால் போராட்டத்தை நிறுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

பல்லாயிரகணக்காக பொதுமக்கள் அமைதியான முறையில் ஆர்பாட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். போராட்டம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் வன்முறையை தூண்டிவிடும் அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், பொதுமக்களின் கோரி்க்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாரதிராஜா

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது, தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். அது வித்தியாசமாக இருக்கும்.

திருநாவுக்கரசர் கண்டனம்

காவல் துறையை பயன்படுத்தி தமிழக அரசு அதிகார துர்பிரயோகம் செய்வதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். போராட்டம் நடத்திய மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல், போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை, செயலற்ற நிலையில் இருக்கும் அரசுக்கும், போலீசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...