தனியாக வசித்து வந்த இளம்பெண்ணிடம் கத்தி முனையில் நடந்த பாலியல் வன்முறை

Report Print Trinity in இந்தியா

தனியாக வசித்து வந்த இளம்பெண்ணிடம் கத்தி முனையில் பாலியல் வன்முறை நடந்துள்ளது.

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை கத்தி முனையில் முகம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் சுஜாதா.(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் சுஜாதா 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். வழக்கம்போல நேற்று நள்ளிரவு வேலை முடிந்து திரும்பிய சுஜாதா சாப்பிட்டபின் அசதியால் உறங்கியிருக்கிறார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த முகம் தெரியாத நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் தப்பித்து இருக்கிறான்.

இது குறித்து ஜேஜே நகர் காவல் நிலையத்தில் விளக்கமாக புகார் தந்திருக்கிறார் சுஜாதா. வந்தது அறிமுகமில்லாத நபர் என்பதால் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டிற்குள்ளே உறங்கி கொண்டிருந்த பெண்ணை இவ்வாறு பாலியல் வன்முறை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers