ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீவைப்பு: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது திடீரென கலவரம் ஏற்பட்டது. இதில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பொலிஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தனியார் அமைப்பு சார்பாக இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.

மேலும் தனியார் ஆட்டோ, போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஆட்சியர் அலுவலக கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பலியானதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பும் இந்த கலவரத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநர் டி கே ராஜேந்திரன் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers