காதலிக்கும் பெண்ணுக்காக இளைஞர் செய்த துணிச்சல் செயல்: கதிகலங்கி போன பல்கலைகழகம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்காக பல்கலைகழக இணையதளத்தை முடக்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார்.

டெல்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகம் உள்ளது. 1920-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமிய தலைவர்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைகழகத்திற்கு, டிசம்பர் மாதம் 1988-ஆம் ஆண்டு மத்திய பல்கலைகழகம் அந்தஸ்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பல்கலைகழகத்தின் இணையதளமான jmi.ac.in-ஐ இளைஞ்ர் ஒருவர் முடக்கியுள்ளார். முடக்கிய அவர் அதில் பூஜா என்ற பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த பெண்ணை காதலிப்பதாகவும் இணையதளத்தை முடக்கிய அந்த நபர் குறிப்பிட்டிருந்தார். பல்கலைகழகம் இணையதளத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்