வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து மிரட்டல் வருகிறது: கண்கலங்கிய நடிகை

Report Print Deepthi Deepthi in இந்தியா

2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த போரை மையமாக வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் 18.5.2009.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை தன்யாவுக்கு வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக அவர் சமீபத்தில் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

மேலும், தனது அம்மாவுடன் வசித்து வருவதால், எங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என கண்கலங்கியுள்ளார்.

இந்நிலையில, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி, இன்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை தன்யா மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், நடிகை தன்யா என்பவர் ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழர் அல்லாத மாற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதால் தமிழர்கள் மேல் இயற்கையாக இருக்கும் காழ்ப்பு உணர்ச்சியைக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் தொலைபேசியில் மிரட்டுவதாகக் காவல்துறையிடம் பொய்யான புகார் கொடுத்துள்ளார். கீழத்தரமான சுயவிளம்பரம் தேடிக்கொள்வதற்காகவே இவ்வாறு ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி பொய் புகார்கள் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

நடிகை தன்யா கூறியதாவது, நான் தமிழ்பெண்தான், எனக்கு விளம்பரம் தேட வேண்டும் என அவசியமில்லை. எனக்கு வரும் மிரட்டல்களை தைரியமாக எதிர்கொள்வேன் என்றும் எனக்கும் மிரட்டல் விடுத்தவர்களின் தொலைபேசி எண்களை பொலிசாரிடம் அளித்துள்ளேன், அவர்கள் விசாரணை நடத்துவார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்