17 வயதில் 40 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர்! இளம் பெண் வேதனை

Report Print Santhan in இந்தியா
466Shares
466Shares
ibctamil.com

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தான் சிறுமியாக இருக்கும் போது 40 வயது நபருடன் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அங்கிருக்கும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

தஞ்சமடைந்த அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு என் அக்காவுக்கு திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கடைசி நேரத்தில் அக்கா திருமணம் வேண்டாம் என்று கூறியதால், என்னை 17 வயது சிறுமி என்று கூட பாராமல் 40 வயதான தாய்மாமனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

அதன் பின் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக தன்னை வீட்டில் அடைத்துவைத்திருந்ததால், தன்னால் தப்பித்து வர முடியவில்லை எனவும், தற்போது ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், தனக்கு திருமண வாழ்க்கையில் விருப்பமில்லை எனவும், வேலை செய்து கொண்டே படிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்