புடினை சந்திக்கவிருக்கிறார் மோடி : அணு ஆயுத ஒத்துழைப்பு குறித்து பேசுவார்கள் என தகவல்

Report Print Balamanuvelan in இந்தியா
38Shares
38Shares
ibctamil.com

இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

புடின் அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் உலகப் பிரச்சினைகள் மற்றும் உள் நாட்டுப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

இந்தியா, ரஷ்யாவுக்கிடையேயான அணு ஆயுத ஒத்துழைப்பை மூன்றாம் நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்வது குறித்தும் அவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 12.25 மணியளவில் பாரதப் பிரதமர் மோடி ரஷ்யாவின் Sochi நகர் வந்தடைந்தார்.

பின்னர் அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார். அவரை புடின் கை குலுக்கியும் கட்டியணைத்தும் வரவேற்றார்.

மோடி ரஷ்யா வர தனக்கு அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடி புடினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Shanghai Cooperation Organisation என்னும் அமைப்பில் நிரந்தர உறுப்பினராக ஆக உதவியதற்காகவும் அவர் புடினுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

குஜராத் முதல்வராக இருந்தபோதுஅப்போதைய பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் முதன் முறையாக ரஷ்யாவுக்கு சென்றதையும், 2000ஆவது ஆண்டு புடின் இந்தியாவிற்கு வந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இன்னும் சிறிது நேரத்தில் பாரதப் பிரதமர் மோடி, Sochiயிலுள்ள Moya Russia-Ethno Centreஐப் பார்வையிட இருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்