அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண்: விசாரணையில் வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மத்திய பிரதேசத்தில் சாகோரி மாவட்டத்தில் இக்ஷார் நகரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் போபாலில் உள்ள பிரகதி நகர் வட்டாரத்தில் ஒரு வாடகை வீட்டில் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளனர்.

உள்ளே 35 வயது பெண் உடல் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்துள்ளது. அந்த பெண் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது தலையில் ரத்தம் உறைந்து போய் இருந்தது. தலையை சுவற்றில் மோதி கொலை செய்து உள்ளனர்.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்றும், அவரது உறுப்பில் 2 பீர் டின்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது என்று அசோகா கார்டன் நகர் இன்ஸ்பெக்டர் சுனில் ஸ்ரீவாஸ்தவா கூறி உள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தியவரை கைது செய்து உள்ளனர். போலீஸ் என்ன நடந்தது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றாலும், அந்த பெண் அந்த நபருக்கு நான்காவது மனைவியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரது முதல் இரண்டு மனைவிகள் அவரை விட்டுவிட்டு ஓடி விட்டனர். மூன்றாவது மனைவி மர்மமான முறையில் இறந்துவிட்டார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்