இளவரசர் திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை: யார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணத்தில் கலந்து கொள்ள மெர்க்கலின் நெருங்கிய தோழியும், நடிகையுமான பிரியங்கா சோப்ரா பிரிட்டனுக்கு விரைந்துள்ளார்.

Windsor Castle-ல் நாளை நடைபெறவுள்ள இத்திருமணத்தில் மிக முக்கிய நபர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் மெர்க்கலின் நெருங்கிய தோழியான பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றுள்ளார்.

நடிகர் விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரும் மெர்க்கலும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அரச குடும்ப திருமணத்துக்கு செல்வதை பிரியங்கா மறைமுகமாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ஜாலியான 10 நாட்கள் பயணம், நடப்பதை அவ்வப்போது தெரியப்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, மெர்க்கலின் திருமணம் குறித்து தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாக பிரியங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்