தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுக்க முயன்ற மனைவி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரின் களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் சர்ஜின்.

ஓட்டுனராக இவருக்கும், கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பபிதா என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, இவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறார்.

சர்ஜின் தனது தாயுடன் அனைவரும் ஒரே குடும்பமாக மரியகிரியில் வசித்து வந்த நிலையில், சர்ஜினுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக பபிதாவுக்கு சந்தேகம் எழுந்தது, இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் சம்பவதினத்தன்று சர்ஜினின் தாய், மகள் வெளியூர் சென்றிருந்த வேளை மறுபடியும் இருவருக்கும் சண்டை மூண்டது.

இதில் கடும் கோபத்தில் இருந்த பபிதா, தூங்கிக் கொண்டிருந்த சர்ஜினை இரும்பு கம்பியால் அடித்துள்ளார், கத்தியை கொண்டு அவரது கழுத்தை அறுக்க முயன்றுள்ளார்.

இதில் வலியால் சர்ஜின் அலறித்துடிக்க விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் பபிதாவை பிடித்தனர்.

சர்ஜினை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் பபிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்