எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

Report Print Fathima Fathima in இந்தியா

கர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்ககூடாது என எடியூரப்பாவுக்கு உச்சநீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக வழக்கின் விசாரணை இன்று நடந்தது.

நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணையை நடத்தினர்.

காரசாரமான வாதத்துக்கு பின்னர், நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அதுவரை நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது.

எந்தவொரு முக்கிய முடிவும் அவர் எடுக்கக்கூடாது, கர்நாடக டிஜிபிதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

முதல் இணைப்பு- எடியூரப்பா முதல்வர்? வழக்கின் விசாரணை தொடங்கியது

கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மஜத கட்சியுடன் சேர்ந்தும், பாஜக தனியாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்தனர்.

பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.

இதற்கு எதிராக காங்கிரஸ்- மஜத கட்சியினர் வழக்கு தொடுத்தனர், இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன்போது, ஆளுநரிடம் ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி, பெரும்பான்மை இருப்பதாக காங்கிரஸ்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கர்நாடக சட்டசபையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்