ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை! முன்னாள் பொலிஸ் அதிகாரி பகீர்- அடுத்தடுத்த திருப்பங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல் துறையின் முன்னாள் உதவி ஆணையாளர் புது தகவல்களை வெளியிட்டு அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

குளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என்றும் அவரது மரணம ஒரு விபத்து எனவும் துபாய் அரசாங்கம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையாளர், இது ஒரு திட்டமிட்ட கொலை என கூறிவருகிறார்.

குளியல் தொட்டியில் போட்டு அழுத்தி அவரை கொலை செய்துவிட்டு குற்றவாளி தப்பித்திருக்கலாம், ஸ்ரீதேவி இறந்தபின்னர் 2 நாட்கள் கழித்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடம்பில் ஆல்கஹால் இருந்துள்ளது என துபாய் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால், அப்படியிருந்தும் இந்த தகவலை முழுமையாக தெரிவிக்காமல், இது ஒரு விபத்து எனக்கூறி இதனை முடித்துவிட்டனர், எனவே இதில் பல கேள்விகள் உள்ளன. மேலும், இதுகுறித்து விசாரிப்பதற்காக ஸ்ரீதேவி தங்கியிருந்த Jumeirah Emirates Towers - க்கு சென்று விசாரணை நடத்த ஆணையாளர் முயன்றுள்ளார்.

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள ஹொட்டல் அறையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வரும் இவர் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்