ஈழம் தொடர்பான படம்: நிர்வாணமாக நடித்த நடிகைக்கு கொலை மிரட்டல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஈழப்போரின் போது தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 18.05.2009.

இப்படம் ஈழப் போரின் கடைசி நாளான மே 18ல் சிங்கள இராணுவத்தால் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையைப் பற்றி பேசுகிறது.

இத்திரைப்படத்தில் சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இன்று இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை தன்யாவுக்கு, போர்க்கள காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொலைபேசி வாயிலாக பேசிய ஒரு மர்ம நபர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நடிகையை ஆபாசமாகவும் திட்டியிருக்கிறார்.

தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வரும் தன்யா, இந்த கொலை மிரட்டல் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்