சொந்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்: அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் குடிபோதையில் அண்ணன் மனைவியை செங்கலால் அடித்து கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் கனியாவாலி கிராமத்தை சேர்ந்தவர் மேஜர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு முழு போதையில் வீட்டுக்கு வந்த மேஜர் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை அடித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மேஜரின் அண்ணன் ரேஷம் சிங்கின் மனைவி சரண்ஜித் கவுர் இருவருக்குள்ளான சண்டையை தடுக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த மேஜர் அங்கிருந்த செங்கலால் தனது அண்ணி கவுர் தலையில் ஓங்கி அடிக்க அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் மேஜர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக கவுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள மேஜரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்