காருக்கு பேன்ஸி நம்பர் வாங்க லட்சக்கணக்கில் செலவு செய்த வாலிபர்! எத்தனை லட்சம் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
257Shares
257Shares
ibctamil.com

இந்தியாவில் இளைஞர் ஒருவர் காரில் பேன்ஸி நம்பர் வாங்குவதற்கு 16 லட்சம் செலவு செய்துள்ளார்.

ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல் தனிஜா. இவர் சமீபத்தில் ஜாகுவார் வகை கார் ஒன்றை சுமார் 1.50 கோடிக்கு வாங்கியுள்ளார்.

இவ்வளவு விலை போட்டு கார் வாங்கிவிட்டோம், அதற்கு பேன்ஸி நம்பர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய அவர், அதற்காக ஜெய்ப்பூர் ஆர்டிஓ அலுவலக அதிகாரியை அணுகியுள்ளார்.

இதற்காக ஒன்றரை மாதம் காத்திருந்த அவர் ரூபாய் 16 லட்சம் செலவிட்டு RJ 45 CG 0001 என்ற ஸ்பெஷல் எண்ணை பதிவு செய்துள்ளார்.

தனிஜாவின் கார்கள் அனைத்தும் ‘0001’ என்ற எண்ணில் தான் உள்ளது. அதேபோல், அவரது செல்போன் எண்ணில் 5 ஒன்றுகள் இருக்கும். பிரித்தானியாவின் F1 என்ற நம்பர் பிளேட் கொண்ட காரானது ரூ.132 கோடிக்கு இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்