கர்நாடகாவில் காங்கிரஸை பழித்தீர்த்ததா பாஜக?

Report Print Gokulan Gokulan in இந்தியா
127Shares
127Shares
ibctamil.com

கடந்த 1996 ஆம் ஆண்டு மஜதவின் மூத்த தலைவர் தேவகவுடா பிரதமராக இருந்தபோது குஜராத்தில் ஆட்சியை கவிழ்த்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவந்ததற்கு தற்போது பாஜக பழித்தீர்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தது தவறு என எதிர்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தால் அதற்கு காரணமான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தை தற்போது பாரதிய ஜனதா பழிவாங்குகிறதோ அல்லது விதி விளையாடுகிறதா என்று நினைக்க தோன்றுகிறது.

கடந்த 1995-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

தற்போது கர்நாடக மாநில ஆளுநராக உள்ள வாஜூபாய் ரூதாபாய் வாலா கடந்த 1996-ல் குஜராத் மாநில பாரதிய ஜனதா தலைவராக இருந்தார். அப்போது குஜராத் முதல்வராக பாரதிய ஜனதாவின் சுரேஸ் மேத்தா இருந்தார்.

1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல்வர் சுரேஷ் மேத்தாவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரான சங்கர் சிங் வகேலா போர்க்கொடி உயர்த்தினார்.

அவருடன் சில MLA-க்கள் கைகோர்த்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் சுரேஷ் மேத்தா வெற்றி பெற்றார். எனினும் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

எனினும் அன்றைய குஜராத் ஆளுநராக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கிருஷ்ணபால் சிங், குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசை கலைக்க பரிந்துரைத்தார்.

அவரின் பரிந்துரையின்பேரில் குஜராத் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அப்போது மத்தியில் பிரதமராக ஆட்சியில் இருந்தவர் தேவகவுடா.

அவரது பரிந்துரையின் பேரிலேயே அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா குஜராத் அரசைக் கலைத்தார்.

அந்த நேரத்தில் குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா. ஆட்சியை கலைக்க வேண்டாம் என கோரி கவர்னர் மாளிகைக்கு நடையாய் நடந்தார்.

ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரசை கலைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோன்ற சூழல் தான் தற்போது கர்நாடகாவில் நிலவி வருவதாகவும் சரியான நேரத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத வை பாஜக பழிவாங்கி விட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்