முதல்வரான பின் எடியூரப்பாவின் முதல் கையெழுத்து

Report Print Fathima Fathima in இந்தியா
241Shares
241Shares
ibctamil.com

கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, விவசாயிகளின் ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடந்தி வருகிறது.

இந்நிலையில் சட்டசபைக்கு வந்த எடியூரப்பா, துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்