தந்தையால் தூக்கில் தொங்கிய தினேஷின் +2 மதிப்பெண் என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் 12 ஆம் வகுப்பு தேர்வில் 1024 மதிப்பெண் எடுத்துள்ளார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் உள்ள இரயில்வே மேம்பாலத்தில் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது தோளில் கிடந்த பையை சோதனையிட்டதில் ஒரு கடிதமும், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் துணிகளும் இருந்தன.

அந்த கடிதத்தில், அப்பா, நான் தினேஷ் எழுதுவது. நான் செத்துப் போனதுக்கு அப்புறமாவது நீ குடிக்காம இரு. நீ குடிக்கிறதனால எனக்கு கொள்ளி வைக்காதே.

மொட்டை போடாதே. ஓப்பனா சொன்னா நீ எனக்கு காரியம் பண்ணாதே. மணி அப்பா (சித்தப்பா) தான் காரியம் பண்ணணும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகியிருந்த நிலையில், தினேஷின் சித்தப்பா மணி, மாமா சங்கரலிங்கம் ஆகியோர் அவரின் பிளஸ் டூ ரிசல்ட்டை பார்த்துள்ளனர்.

அதில் தினேஷ் 1024 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழ் 194, ஆங்கிலம் 148, இயற்பியல் 186, வேதியியல் 173, உயிரியல் 129, கணிதம் 194 என மொத்தம் 1024 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்த தகவலை தினேஷின் மாமா சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்