இளம்பெண்ணை திருமணம் செய்த 6 குழந்தைகளின் தந்தை: கண்ணீர் சிந்தும் பெற்றோர்

Report Print Santhan in இந்தியா
742Shares
742Shares
ibctamil.com

தமிழகத்தில் இளம் ஆசிரியை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், கடத்தி மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு மாலதி என்ற மகள் உள்ளார். இவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மாலதி ஈரோட்டில் உள்ள அவரது அத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று மாலை ஊர் திரும்பிய போது, பேருந்து நிலையத்தில் இருந்த கும்பல் ஒன்று மாலதியை கடத்திச் சென்றுள்ளது.

இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மாலதியின் தந்தை, காவல்நிலையத்திற்கு சென்று கண்ணீர் மல்க புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற மகள் வீட்டிற்கு திரும்பவில்லை எனவும், அவளை பணத்திற்காக ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி மணிகுமார் என்பவர்தான் கடத்திச் சென்று விட்டதாகவும், அவர் தனது மகளை திருமணம் செய்துகொள்ளவே கடத்தி சென்று இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், மணிக்குமார், அரசுப் பள்ளி ஆசிரியை மலைதியை மூன்றவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், மாலதி சம்மதத்துடனேயே இந்தத் திருமணம் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தலைமறைவாக உள்ள இருவரையும் பொலிசார் தேடிவருவதாகவும், மணிக்குமார் ஏற்கனவே இரண்டு திருமணமாகி ஆறு குழந்தைகள் உள்ள நிலையில் இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்