கர்நாடகாவில் பாஜக யுக்தியை கையாளும் காங்கிரஸ்

Report Print Gokulan Gokulan in இந்தியா

பாஜக மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை விட குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றே மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. அதே யுக்தியை தற்போது காங்கிரஸ் பயன்படுத்தி கர்நாடகாவில் அட்சி அமைக்க முயல்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் மேகாலயாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில் பெரும்பான்மை பெற 31 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெறவில்லை.

இதனை பயன்படுத்த நினைத்த பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியுடன் மற்ற உதிரி கட்சிகளை சேர்த்து ஆட்சி அமைத்தது.

40 தொகுதிகளை கொண்ட கோவாவில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பாஜக 14 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது.

இருப்பினும் சுயேச்சைகள் சிறுகட்சி உறுப்பினர்களை கூட்டணியில் சேர்த்து கோவாவில் ஆட்சி அமைத்தது. இதேபோல மணிப்பூர், ஜம்முகாஷ்மீர் போன்ற மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்த முறை கர்நாடக தேர்தலில் பாஜகவின் யுக்தியை காங்கிரஸ் முந்திக்கொண்டு தன் கையில் எடுத்து கொண்டது. மத சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers