காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது: உச்சநீதிமன்றம்

Report Print Gokulan Gokulan in இந்தியா

அணைகளின் கட்டுபாடு மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என வரைவு திட்டத்தை தாக்கல் செய்த மத்திய அரசின் அறிக்கையில் மாற்றம் செய்து நீர் பங்கீட்டில் காவிரி அமைப்பின் முடிவே இறுதியானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி வரைவு அறிக்கையை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த காவிரி வரைவு அறிக்கையில் காவிரி அமைப்பு என்று ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனவும், அந்த அமைப்பில் மத்திய நீர் வள செயலாளர் 4 மாநில பிரதிநிதிகள் உட்பட 10 பேர் இருப்பார்கள் எனவும், இந்த அமைப்பின் கீழ் காவிரி ஒழுங்காற்று குழு செயல்படும் எனவும் அந்த குழுவில் 9 பேர் இருப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் 4 மாநிலங்களின் முடிவுகளை இன்று கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரிலேயே காவிரி அமைப்பு செயல் பட வேண்டும் என்றும், தமிழகமோ, கர்நாடகாவோ அணை கட்ட வேண்டும் என்றால் வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரியமே நீர் பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் அதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாரியம் என்ற பெயர், நீர் பங்கீட்டில் இறுதி முடிவு, அணை கட்ட அனுமதி என இந்த மூன்று அம்சங்களையும் திருத்தி புதிய வரைவு திட்டத்தை நாளை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்