திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உல்லாசம்: புதுப்பெண்ணை கொன்ற புதுமாப்பிள்ளை

Report Print Deepthi Deepthi in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்த புதுமாப்பிள்ளையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் என்பவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் வருகிற 20 ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் தான், திவ்யாவை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார் விஜயகுமார். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட விஜயகுமார், இதுகுறித்து பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம்.

ஜாதகம் பொருத்தமில்லை என ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அதன்பின்னர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அவளுக்கு ஒரு செல்போனை பரிசாக வாங்கிகொடுத்தேன், இதையடுத்து அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, அவர் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார், இருப்பினும் அவர் நடத்தை மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இரவு 11 மணி அளவில் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, தனிமையில் பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். அவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் என்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இதையடுத்து இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம், அங்கு உல்லாசமாக இருக்க அழைத்தேன், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த நான் அவரது கன்னத்தில் அறைந்தேன்.

இதில் அவர் மயங்கி விழுந்த அவரை கற்பழித்து, அருகில் உள்ள கிணற்றில் தள்ளினேன், இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...