+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.

97 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது, 1907 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
 • விருதுநகர்- 97.05
 • ஈரோடு- 96.35
 • திருப்பூர்- 96.18

83.35 சதவீதத்துடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
 • இயற்பியல்- 96.4
 • வேதியியல்- 95
 • கணிதம்- 96.1
 • உயிரியல்- 96.3
 • தாவரவியல்- 93.9
 • விலங்கியல்- 91.9
 • கணினி அறிவியல்- 91.1
 • வணிகவியல்- 90.3
 • கணக்கு பதிவியல் - 91
மதிப்பெண்கள் விபரம்
 • 1180க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 231
 • 1151- 1180 மதிப்பெண் பெற்றவர்கள் 4,847
 • 1101- 1125 மதிப்பெண் பெற்றவர்கள் 11,739
 • 1001- 1100 மதிப்பெண் பெற்றவர்கள் 71,368
 • 901- 1000 மதிப்பெண் பெற்றவர்கள் 1,07,266
 • 701- 800 மதிப்பெண் பெற்றவர்கள் 1,65,425

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers