கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? தீர்மானிக்கும் தொகுதி இதுதான்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் தொகுதி ஷிரகட்டி ஆகும்.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஷிரகட்டி தாலுகா. இது சட்டப் பேரவைத் தொகுதியாகவும் அமைந்துள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும்போது ஷிரகட்டி தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சியை அமைத்து வருகிறது. இது 7 பேரவைத் தேர்தல்களிலும், 5 மக்களவைத் தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஷிரகட்டி தொகுதியில் இம்முறை பாஜக வேட்பாளர் ராமப்பா சோபேப்பா லமானி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தொட்டமணி ராமகிருஷ்ணா சிதலிங்கப்பா 2-வது இடத்தைப் பிடித்தார். தற்போது பாஜகவும் இந்தத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சி பீடத்தில் அமரவுள்ளது.

2013-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் ஷிரகட்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸ் 122 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...