இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன்: ஒரே வாரத்தில் 3-வது சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேஸத்தின் சாகர் மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீட்டில் தனியாக இருந்த 16 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து வலுக்கட்டாயமாக இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தமது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவிப்பேன் எனக் கூறிய இளம்பெண்ணை அந்த நபர் கொடூரமாக தாக்கி, உயிருடன் எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் இந்த வாரத்தில் நடந்துள்ளது. 17 வயது இளம்பெண்ணிடம் இளைஞர் ஒருவர் திருமண கோரிக்கையுடன் பல முறை தொல்லை தந்துள்ளார்.

ஆனால் குறித்த இளம்பெண் தமக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், குறித்த இளம்பெண்ணை உயிருடன் நெருப்பு வைத்துவிட்டு தப்பியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சமீப காலமாக பாலியல் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கும்பல் ஒன்று போதை மருந்து தந்து தொடர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, பின்னர் கல்லால் அடித்தே கொலை செய்த சம்பவம் நாடு முவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய 8 இந்து சமுதாயத்தினர் கைதாகினர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers