சாக்கு தைப்பது போல சடலத்தை தைத்த தொழிலாளி: புகைப்படத்தால் மக்கள் அதிர்ச்சி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்துபோன சடலத்துக்கு நபர் ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தையல் போட்டுக்கொண்டிருக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 மருத்துவர்கள் வேறு உள்ளனர்.

தலைமை மருத்துவர் தேவராஜன் விடுமுறையில் உள்ளதால் டாக்டர் வேல்முருகன் என்பவர் பொறுப்பு தலைமை மருத்துவராக உள்ளார்.

வீரமணி என்கிற அந்த நபர், மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துணிகளை துவைத்து தரும் தொழிலாளி ஆவார்.

இவர், பிரேதபரிசோதனைக்கு பின்னர் இறந்துபோன நபரின் சடலத்தை சாக்கு தைப்பது போல ஊசியால் தைக்கிறார்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், கையுறை மட்டும் அணிந்தபடி செய்யும் இவரது செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது மருத்துவர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே உடன் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...