பொலிசிடம் வசமாக சிக்கிய எம்பிஏ திருடன்! மனைவியும் கைது

Report Print Trinity in இந்தியா

மும்பையின் நவீன வசதி கொண்ட பிளாட்களில் தங்கி அங்குள்ள வீடுகளில் கொள்ளை அடித்த எம்பிஏ திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மும்பையை சேர்ந்த விக்ரோலி சாந்தன் நகரில் தனய் அகர்வால் என்பவர் வசித்து வந்தார். சமீபத்தில் இவரது வீட்டில் ரூ.10 லட்சம் பெறுமானம் உள்ள தங்க வைர நகைகள் மற்றும் பணம் திருடு போயின.

இதுபற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் தனய், களத்தில் இறங்கிய பொலிசார் தீவிர விசாரணைக்கு பின் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஆன ஹிம்மந் பீட்டர் ட்ரெபெல்லோ என்பவரை கைது செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட ஹிம்மந் பின்புதான் 25 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் எம்பிஏ படித்தவர் என்பதும் அவரது மனைவி சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்பதும் தெரிய வந்ததில் பொலிஸ் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஹிம்மந் முதலில் பணக்காரர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்ப்பதும் பின், அங்கு குடியேறியபின் அங்குள்ள வீடுகளை நோட்டம் விடுவதும் வழக்கம்.

யார் யார் வெளியூர் செல்கிறார்கள் என்பதெல்லாம் நட்பாக பழகி தெரிந்து கொண்டபின், அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் பால்கனி வழியாக வீட்டிற்குள் சென்று திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதற்கு இவர் மனைவியும் உடந்தை. தேவையான அளவு பணம் கிடைத்ததும் வீட்டை காலி பண்ணி விடுவார்களாம், இதுபோலவே 26 இடங்களில் திருடியிருக்கிறார் இந்த எம்பிஏ திருடர்.

இது பற்றி சாந்தன் நகர காவல்துறை அதிகாரி ஸ்ரீதர், அதிகமாக படித்த இவரும் இவரது மனைவியும் இப்படி ஹைடெக் முறையில் திருடுவது ஆச்சர்யமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஹிம்மந்தை 14ம் தேதி வரை காவலில் எடுத்துள்ள பொலிசார், மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers