வேண்டுதலுக்காக அம்மன் முன்பு நாக்கை அறுத்துக் கொண்ட பெண்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் கோவிலுக்கு சென்றவர், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தமது நாக்கை அறுத்துக் கொண்டார்.

இதனால் மயங்கி விழுந்தவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், வேண்டுதலுக்காக, தோமார் தமது நாக்கை அறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers