எனது மகனை கொன்றதால் நிம்மதியாக இருக்கிறேன்: தந்தை வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

போதைக்கு அடிமையான எனது மகனின் தொந்தரவு தாங்கமுடியாமல், நிம்மதி இழந்து தவித்த நான், அவரை கொன்ற பின்னரே நிம்மதியாக இருக்கிறேன் என எழுத்தாளர் சௌபா கூறியுள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சௌபா என்ற சவுந்திரபாண்டியன், பிரபல எழுத்தாளரான இவரது மனைவி லதா பூரணம் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் நிலையில், இவர்களது மகன் விபின் இருவரிடமும் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக தந்தையுடன் தங்கியிருந்த மகனை காணவில்லை என எஸ்.எஸ்.காலனி பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி லதா பூரணம் புகார் அளித்தார்.

சந்தேகத்தின் பேரின் சவுந்திரபாண்டியனிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சவுந்திரபாண்டியன் கூறியதாவது, எனது சொத்துக்களை 'செட்டில்' செய்துவிட்டு சரணடையலாம் என நினைத்திருந்தேன்.

அதற்குள் மனைவி பொலிசில் தெரிவித்துவிட்டார். நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்வதால், எங்கள் பேச்சை மகன் கேட்க வேண்டும் என்று அவனுக்கு வேண்டியதை, தனித்தனியே போட்டி போட்டு வாங்கி கொடுத்தோம்.

எனது போர்டு இகோ காரை, 3 லட்சம் ரூபாய்க்கு கார் ஏஜன்சியிடம் விற்றான். இதுகுறித்து கேட்ட என்னிடம் தகராறு செய்தான். கொடைக்கானல் வீட்டை விற்று பணம் தருமாறு தொந்தரவு செய்தான்.

போதைக்கு அடிமையான அவனது தொந்தரவால் நிம்மதி இழந்து தவித்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers