பாலியல் உறவுக்கு மறுத்த சிறுமி: உறவினர் செய்த கொடூர செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமி மர்மமான முறையில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மல்லூர் கிராமத்தினை சேர்ந்த அழகேசன்- கஸ்தூரி தம்பதி, 9 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்ததால், அவர்களின் மகள் மீனா, கஸ்தூரியின் பெற்றொர் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 17 வயதான நிலையில் மீனா, கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தான், கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வரும் தந்தையின் பெற்றோரான, தனது தாத்தா- பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர்களுடன் சித்தப்பா வீராசாமி என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர் அடிக்கடி சிறுமி மீனாவிடம் முறைதவறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் தாத்தா குப்புசாமியும்- பாட்டி தீர்த்தம்மாளும் விவசாய வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனித்து இருந்த மீனா, நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமுற்ற அக்கம்பக்கத்தினர், வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் சிறுமி மீனா உயிரிழந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றனர். பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மீனாவின் சித்தப்பா வீராசாமி, பாலியல் ரீதியாக மீனாவை துன்புறுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் சிறுமியை வெட்டி கொலை செய்திருக்கக்கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தலைமறைவாக உள்ள வீராசாமியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெற்றோரை இளம்வயதில் இழந்து பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுமியை, ஈவு இரக்கமின்றி சித்தப்பாவே படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers